சிதறல்கள்

Friday, November 22, 2013

சச்சின் --- நூற்றாண்டின் பொக்கிஷம் (The Legend of Legends)




"நீரின்றி அமையா உலகு
சச்சின் இன்றி நினையா கிரிக்கெட்"

எனும் அளவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காத அளவுக்கு நினைவில் நிற்பவர்  சச்சின்.

என்னுடைய நீண்ட கால ஆசைகளில் ஒன்று சச்சினை பற்றி நாமும் உணர்ந்த,அலசிய,உள்ளார்ந்த சில விடயங்களை நமது எழுத்தால் பதிவு செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும் .எங்களது இளம் பருவத்தில் அதிகமுறை உச்சரிக்கப்பட்ட,விவாதபடுத்தப்பட்ட பெயர்களில் ஒன்று சச்சின் டெண்டுல்கர் .

                                சச்சின் தனது 11ம் வயதில் கிரிக்கெட் வாழ்வை தொடங்கி 16ம் வயதில் சர்வதேச கிரிக்கெட் உலகில் நுழைந்து இந்த வருடம் 2013 யுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.இந்த நிலையில் சச்சின் கிரிக்கெட் வாழ்வை பற்றி அசை போடுவதுக்கு சரியான தருணம் என்பது என் திண்ணமான எண்ணம்.

சச்சின் = அர்ப்பணிப்பு

சச்சின் போல பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் குறிப்பாக உலகளவில் Mark Waugh, Brian Lara, Inzamam,Syed Anwar,,Jeyawardne,Cullinan,Kristen இந்திய அளவில் Sourav, Rahul,Laxman,Kambli ஆகியோர் 90களில் தங்களது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்தவர்கள்.இன்னும் சொல்ல போனால் ஆட்ட நுணுக்கங்களை வைத்து பார்க்கும் போது சச்சினுக்கு ஏறக்குறைய ஒத்தவர்கள் தான் மேல குறிப்பிட்ட அனைவரும் இன்னும் விடுபட்ட சிலரும் கூட.

ஆனால் சச்சின் என்றால் தனிமனித ஒழுக்கம்(Discipline),அர்ப்பணிப்பு (Dedication), தீர்வு காண்பதில் உள்ள முனைவு (Determination),குறைந்தபட்ச நேர்மை யாருக்கும் சச்சின் அளவுக்கு  நிகராக வரா...
இதுதான் சச்சின்; இதனால் தான் சச்சின் ...

சச்சின் ஒருவர் தான் இன்டர்நேஷனல் கிரிக்கெட் உலகின் 30,000 ரன்களுக்கு மேலும்,50000 ரன்களுக்கு மேல் அனைத்து விதமான கிரிக்கெட் (Domestic & International,county) ஆட்டங்களிலும் கடந்தவர். சச்சின் மட்டும் தான் தன் தலைகனத்தை கூட கனமான பேட்டில் மட்டும் காட்டும் அற்புதமான விளையாட்டு வீரர் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

சச்சின்- கிரிக்கெட்  காலகட்டம்

சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையை என்னை போல சாதாரண கிரிக்கெட் ரசிகனின் பார்வையில் நான்கு கால கட்டமாக பிரிக்கலாம்.

·         முதல் கட்டம் (1989-1994)

இந்த ஆரம்ப கட்ட காலத்தில் தான் சச்சினின்  "Raw Cricket" யை நன்கு ரசிக்கலாம்.அதுவும் அந்த POWER BAT யை மறக்கவே முடியாது மேலும் இந்த கால கட்டத்தில் இந்திய அணியில் நிலையான இடம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.அதிலும் முன்னணி வீரராக விளங்கி நின்றதே மிக பெரிய அதிசயம்,
அந்த அதிசய சச்சினின் ஆட்ட சில துளிகள்
  • 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக Srikanth தலைமையிலான அணியில் இடம் பிடித்து அதே ஆட்டத்தில் அறிமுக வீரராக களம் இறங்கிய Waqar younis  பந்தில் பௌன்சரில் மூக்கில் அடிபட்டு ரத்தம் பீறிட்டு பிறகு அதே Waqar எதிர் கொண்டு பேட் மூலம் ரத்தம் கக்க வைத்த நிகழ்ச்சி.
  • .அந்த காலகட்ட Top -spinner  Abdul Qadir  பந்து வீச்சை மைதானத்தின் நான்கு மூலைகளிலும் சிதற விட்டு தேட விட்டவர். இதெல்லாம் சச்சினின் aggression க்கு சரியான சான்று.
  • இங்கிலாந்து Old Traford மைதானத்தில் முதல் சதம் அடித்தது
  • World Cup ஆஸ்திரேலியாவில் விளையாடியது



இன்னும் சொல்லப்போனால் ,
இந்த கால கட்டத்தில் தான் கிரிக்கெட் உலகில் பந்து வீசுபவர்கள் அதிகளவு ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தினர்.

அன்றைய முன்னணி பந்து வீச்சாளர்களான WasimAkram,WaqarYounis,Imrankhan, Ambrose,Wallce,Donnald,De-villers,Mcdermott,Bruce reid,Huges பலரை திறம் பட எதிர் கொண்டு தனது திறமையும் மெருகேற்றி அதன் மூலம் இந்தியாவுக்கு வெற்றிகளை சுவைக்க வைத்தவர் sachin.

·         இரண்டாம் கால கட்டம் (1994-2000)

இந்த காலகட்டம் தான் சச்சினின் பொற்காலம் என்று கூறலாம்.இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர் உதடுகளும் தினமும் ஒரு முறையாவது இவரது பெயரை எதோ ஒரு வகையில் சொல்ல வைத்த நாட்கள் இந்த காலத்துக்கு சொந்தமானது என்று சொன்னால் நிச்சயம் மிகையாகா.

சச்சின் Raw cricket யை  matured கிரிக்கெட் யாக உருமாற்றி அதற்கு அவரது fitness யும் ஒத்துழைத்து பெற்ற வெற்றிகள் ஏராளம்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்
  •    சச்சின் தானே ஆசை பட்டு அசாரிடம் கேட்டு Opening வீரராக களம் இறங்கி New-zealand எதிராக 49 பந்தில் 82 ரன்னில் எடுத்த தருணம் இன்றும் மறக்க இயலா..  மேலும் 30 of the circle யை சரியாக பயன்படுத்தி the form of one-day cricket யை மாற்றி அமைத்த பெருமைக்குரிவர் சச்சின்.
  • 1996 ல் உலக கோப்பை போட்டியில் இரண்டு சதம் உட்பட 500க்கு மேல் ரன் குவித்து முதல் இடம் பிடித்தது .இந்த கால கட்டத்தில் தான் world international cricket ல் எளிதாக 300 ரன்களை கடக்க ஆரம்பித்த நேரம் எனலாம்.
  •  Shane Warne கனவுகளில் கூட சச்சின் விரட்டி,விரட்டி அடித்து Sourav தலைமையிலான அணியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது
  • Sharjaah Coca-cola series ல் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்து (134,141) கோப்பை வென்றது
  • தாகாவில் 1998ல் நடைபெற்ற Mini-Worldcup ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து சதிராடி   semi-Final நுழைந்தது

கிரிக்கெட் வெறியராக அதுவும் சச்சின் வெறியராக இந்திய ரசிகர்களை மாற்றி தளம் அமைக்கப்பட்ட கால கட்டம் இதுதான் என சொன்னால் தவறில்லை.அதுவும் எங்களை போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சின் கிரிக்கெட்டை முழுவதுமாக  தரிசித்த தளம் இதுதான்...

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கிரிக்கெட் மதம் போல் மாறி அதனை காவு கொடுக்கும் விதமாக பல bookies நுழைந்தது,Bedding ஆரம்பித்தது எல்லாம் இந்த காலகட்டத்தில்தான்.எப்போதல்லாம் bookies இடையுறு இருந்து இருக்கிறதோ அப்போதெல்லாம் சச்சின் பேட் மூலம் பதில் கிடைக்கும் எனும் அளவுக்கு நேர்மையின் மைல் கல்லாகவும்,அர்ப்பணிப்பின் உறைவிடமாகவும் இருந்தவர் sachin.

·         மூன்றாம் காலகட்டம் (2001-2007)

சச்சின் அளவுக்கு அனைத்து வித விளையாட்டு உலகில் injury ஆகி மீண்டும் மீண்டும்  பீனிக்ஸ் போல் வந்து நிலைத்து ஆடி பெயர் பெற்ற அதனினும் அதே புகழுடன் நீடித்த வீரர் எவருமே இல்லை என்றே சொல்ல வேண்டும் அதுதான் தார்மீகமானது கூட ...

சச்சின் injury list தெரிந்து கொள்ள கீழ்கண்ட link பார்த்தாலே புரியும்

இதனையும் மீறி இந்த காலகட்டத்தில் சச்சின் விளையாடிய விதம் அலாதியானது,இந்த நேரத்தில்தான் Shewag,Yuvraj,Sourav,Dravid ஆகியோரும் ஆதிக்கம் செலுத்தியது.

சச்சின் மேல் இருந்த "Dependency of indian cricket" யும் விடுபட தொடங்கியது.இதில் ஒரு விசேச விடயம் என்னவென்றால் இந்த கால கட்டத்தில்தான் சச்சின் ரன் அடிக்கும் விதம் (Strokes ) மாறி ரன் மழை பொழிய தொடங்கியது.இதனை "sachin implemented his decent ,determined matured technical playing strategy/methodlogy" என கூறலாம் .

இந்த காலகட்டத்தில் சில துளிகள்
  • 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சௌரவ் தலைமையில் விளையாடி டெஸ்ட் தொடரை வென்றது
  • சச்சின்-சௌரவ் partnership 6000 ரன்களுக்கு மேல் எடுத்தது (22 சதம் மற்றும் 20 அரை சதம் உட்பட)
  • வசிஷ்டர் Bradman  வாயால் பிரம்மரிசி பட்டம் சச்சின் வாங்கியதை
  •   2003 உலககோப்பையில் சௌரவ் தலைமையிலான அணியில் 600 ரன்களுக்கு மேல் குவித்து இறுதி போட்டியில் பங்கு பெற்றது
  •  பாகிஸ்தானுடன் 194 ரன்கள் Multan மைதானத்தில் குவித்ததுஅதை தொடர்ந்து dressing-room கலாட்டா..
இந்த 2007ல் தான் உலககோப்பையில் super-eight ல் கூட இடம்பிடிக்க முடியாதது கூட நடந்தேறியது

·         நான்காம் காலகட்டம் (2008-2013)

இந்த தருணத்தில் தான் சச்சின் தனது கனவான worldcup வென்றது ,மேலும் the form of indian cricket முற்றிலுமாக மாறி இருந்தது .சச்சின் மீதிருந்த அனைத்து பாரங்களும் Shewag,Gambir,Kohli,Dhoni,Raina,Yousuf ஆகியோரால் ஏற்று கொள்ளப்பட்டது.

இந்திய கிரிக்கெட் தலைமகனை இந்திய அணியின் இளம் வீரர்கள்  தூக்கி கொண்டாடிய 2011 worldcup நினைவை  விட்டு அகலா....


இறுதியாக சச்சின் தனது 100வது சதம் போராடி அடித்தது ,அதனை தொடர்ந்து சச்சின்
"It's been a tough phase for me ... I was not thinking about the milestone, the media started all this, wherever I went, the restaurant, room service, everyone was talking about the 100th hundred. Nobody talked about my 99 hundreds. It became mentally tough for me because nobody talked about my 99 hundreds." என சொன்னதை நினைவு கூறலாம்..
Batting Statistics
TypeMatInnsNORunsHSBFAvgSR100's50's6's4's
ODI46345241184262002136744.8386.2449961952016
Test20032933159212482943753.7954.085168692058
T2011010101210.0083.330002
IPL787892334100194833.83119.8211329295
ChampLeague131302656924320.38001434
Bowling Statistics
TypeMatBallsRunsWktsBBIBBMEconAvgSR4W5W10W
ODI463805468501545 / 325 / 325.1044.4852.30420
Test20042402492463 / 103 / 143.5354.1792.17000
T201151211 / 121 / 124.8012.0015.00000
IPL78365800 / 70 / 79.67--000
ChampLeague13000- / -- / ----000

சச்சின் ஆட்ட நுணுக்கங்கள் அதிகளவு criticize செய்யப்பட்டதும் அவரது ஓய்வை பற்றி அதிகளவில் அலச பட்டதும் இந்த கால கட்டத்தில்தான்

சச்சின் ஓய்வு

சச்சின் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக என்று கூட சொல்ல இயலா ,தனது வாழ்க்கையே கிரிக்கெட்டாக வாழ்ந்த மாமனிதன் தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விலகலை 2012ல் அறிவித்தார்.

மேலும் எல்லா விதமான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக மனமேயின்றி 10 அக்டோபர் 2013ல் அறிவித்தார், அதன்படி தனது 200 வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் எடுத்து கிரிக்கெட் எனும் தனது இதயத்தை நிறுத்தி கொண்டார் என எழுதும் போது கூட எழுதும் சிறிது நேரம் நின்று தான் வருகிறது அனிச்சையாக..

சச்சின் பற்றி சில,பல விவாதங்கள் இருந்தாலும் இத்தருணத்தில் சச்சினின் தனி மனித சாதனை ,அற்பனைப்புகு முன்னால் அத்துணை விமர்சனங்களும் மைக்ரோ அளவே என்பது திண்ணம் .சச்சின் ஓய்வை மனம் ஒப்ப மறுத்தாலும் அது காலத்தின் கட்டாயம்

பாரத ரத்னா -சச்சின்

இங்கே நாம் ஒன்றை நினைவு கூற முற்பட வேண்டும் இந்திய கிரிக்கெட் உலகில் சச்சின் அளவுக்கு ஆடி புகழ் அடைந்தவரும் இல்லை ,பொருள் அடைந்தவரும் இல்லை எனலாம் .இதற்கு பிறகு ஒரு சச்சின் வருவாரா என்பது தனி விவாதம் ,எனினும் என் தனிப்பட்ட கருத்து இன்னும் ஒருவர் வந்து சச்சின் சாதனைகள் ஒருவேளை முறியடிக்கப்படலாம் ,அது காலத்தின் கட்டாயம்....
ஆனால் இன்னும் ஒருவர் வந்தாலும் சச்சின் அளவுக்கு 24 ஆண்டுகள் கிரிக்கெட் அர்ப்பணிப்புடன் ஆடி,ஒழுக்கம் போற்றி தனது புகழை தலைக்கு ஏற்றாமல் தரணி போற்றபடுவது என்பதை நினைத்தே பார்க்க இயலா பாய்சான் ரேசியோ ....
சச்சின் தனது 200 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி விடை பெற்ற அதே நாளில் இந்திய பேரரசால்  பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

சச்சின் சிறப்பம்சம் சில
  • இதுவரை 200 அநாதை தெய்வ குழந்தைகளுக்கு கல்வி வழங்கி கொண்டிருப்பது..
  • இதுவரை கோடிகளில் கொட்டி குடுத்தாலும் புகை,மது விளம்பரங்களில் நடிக்காதது ...

பாரத ரத்னா விருதை பற்றி பல்வேறு விவாதங்கள் இருந்தாலும் இதுவரை சிலருக்கு கொடுக்காதது அரசின் தவறேயன்றி தனி மனித தவறல்ல...இந்த விருது கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்

“மக்கள் மனதில் சச்சின் பொக்கிஷமே
ஆம் பாரதத்தின் பொக்கிஷமே
இந்நூற்றாண்டின் பொக்கிஷமே



நிறைவாக சச்சின் பற்றி சிதறல்கள் சில

சச்சின் நீ ஒரு சாதனை -அல்ல
சகாப்தம் நூற்றாண்டின் சகாப்தம்;

சச்சின் உனக்கு விருது கொடுக்க தேவையில்லை
உன் பெயரால் தான் விருதே கொடுக்க வேண்டும்;

அர்ப்பணிப்பின் ஆண்மகன்-நீ
கிரிக்கெட்டின் பிதாமகனே ஏற்ற  தலைமகன்;
எதிராளிகளின் ஆதர்சன நாயகன்;




உன் கையில் இருப்பது Bat அல்ல
இந்திய கிரிக்கெட்டின் Fate ..... 


Last but not Least
"If religion is cricket
Sachin is Universally accepted GOD"









உணர்வுடன்,

விஜய் ஆனந்த் S