Election-ல் தேறுகின்ற தலைகள் எல்லாம்
தறுதலைகள் –ஆம் !
தருகின்ற தலைகள் .....
தருவாய் நோட்டு ஆயிரத்தில்
பெருவாய் ஒட்டு மக்களிடத்தில்
என்னே ஜனநாயகம் !!!
ஜனங்களுக்கு நாயகனாய் வருபவன்
பணத்துக்கு நாயகன் ?
பரிவாரத்துக்கு நாயகன் ?
ஆனால்.....
என் இனத்துக்கோ எதிரி !
வாழ்க ஜனநாயகம்....
பெருந்தலைவரும், அறிஞரும்
ஒட்டு கேட்ட ஊரில்
பொய்யர்களும், குடிகாரர்களும்
ஒட்டு வேட்டை ஆடுகின்றனர்....
புள்ளிவிவரத்தோடு ஒட்டு
கேட்ட காலம் மாறி ;
புள்ளி ராஜாக்கள் ஒட்டு கேட்கிறார்கள்
இது தான் கலி காலமோ ?
ஐயோ
என்ன பாவம் செய்தது என் தமிழ் ஜாதி
தமிழா !
ஆதி காலத்தில் உன் புகழ் பாடும் - இனம்
வெற்றிலைக்கு கோதுமை தந்தாய் - என்று
பண்ட மாற்றத்துக்காக ...
இன்றும் பழசை மறப்பவன் அல்ல- நீ?
நோட்டுக்கு ஒட்டு சீட்டை மாற்றுகிறாய் !
என்னே பரிவர்த்தகம்!!
என்னே பண்ட மாற்றம் !!
இதனால்
வாழ்வது நீதானோ ?
அல்ல அல்ல
கள்வர்கள் கவர்கிறார்கள் உன் - ஒட்டு சீட்டை
கயவர்கள் உருவுவார்கள் - விரைவில்
உன் வீட்டின் மேற்புற ஓட்டை...
உணர்வுடன்
விஜய் ஆனந்த் S
No comments:
Post a Comment