சிதறல்கள்

Sunday, May 8, 2011

அம்மாவுக்காக (அன்னையர் தினம் spl )










அம்மா

( - உயிர் ; ம் - மெய் ; மா -உயிர் மெய்)

உயிரும் மெய்யும் சேர்ந்து

உயிர் மெய்யாய் - மழலையினை

உருவாக்குவாய் - நீ !


குழவியாய் கருத்தரித்து ;

குழந்தையாய் ஈன்றெடுத்து ;

குமரனாய் வளர்த்தெடுத்து ;

குன்றேறி குபேரனாய்

வாழ வைப்பாய் ! நீ ! தாய் அல்லவோ !


உன் மடியில் உணவு - எனக்களிப்பாய்

உன் நிழலில் எனை - வளர்ப்பாய்

உன் மார்பில் போர்த்தி எனை - தூங்க வைப்பாய்

எனக்கு உணவு - உடை - இருப்பிடம்

நீதானே ! தாய் தானே !


ஆன்மிகம் ஆயிரம் சொன்னாலும்

அம்மா சொல் தானே வேதம் !!!


அறிவியியல் கோடி சொன்னாலும்

அன்னை சொல் தானே - ஈர்ப்பு தத்துவம்

ஆம்

மன ஈர்ப்பு தத்துவம்!!!


மறையும் தலைவர்கள் 100 செய்தாலும்

ஈன்ற அன்னையின் ஓர் செயலேமறை!!!


விளையாட்டாய் மகன் செய்யும்

ஒவ்வொரு செயலையும்

வியப்பில் பார்த்து வியாபிப்பாயே !


ஆண்டவன் அருளிய கதையில்

நீதி இருக்கும் ;

தாயே ,நீ சொல்லும்

கதையில்

என்னுள் நீதானேஇருப்பாய்.


அன்பால் நீ ஊட்டும்

ஓர் கவள சோற்றுக்கு

அகிலத்தையே கொடுத்தாலும் -இணையாகா


அம்மா உடல் மறைக்கும் துணியில்

ஒட்டு இருக்கும் ;

ஆசையாய் மைந்தன் அணியும் ஆடையில்

ஓட்டை இருக்கும் ?

fashion ஆக...


புத்தியற்று உள்ளவனுக்கு

போதி மரம் நீதானே !

நாதியற்று உள்ளவனுக்கு

நங்கூரம் பாய்சுபவன்

நீதானே ! பெற்ற தாய்தானே !!


துறவியும் துறக்க இயலா உறவல்லவா - நீ

ஆம்

ஆதி சங்கரனும்

பற்றற்ற பட்டினத்து அடிகளும்

துறவா உறவே தாய் உறவு !!!


துறவியே துறக்க இயலா உறவை துறந்தவன்

மனிதன் அல்ல - மலடன் ..

நாங்கள் மனிதர்களாய் இருக்கிறோம்

அன்னையினை தெய்வமாய்

நடமாடும் தெய்வமாய் - தொழுவோம் !!


கருப்பையின் இடது மூலையில்

நீ என்னை சுமந்ததால்

நீதானே

எனக்கு கன்னி மூல கணபதி ...


உணர்வுடன்

விஜய் ஆனந்த் S

No comments:

Post a Comment