சிதறல்கள்

Tuesday, July 13, 2010

மழலைச்செல்வம்



இனிது இனிது மழலை - இனிது

அதனினும் இனிது - மழலைச்சொல் ;


அரிது அரிது குழந்தைப்பேறு - அரிது

அதனினும் அரிது - நற்குழந்தைப்பேறு;


புதிது புதிது புன்னகை - புதிது

அதனினும் புதிது -குழந்தையின் புன்னகை ;


எளிது எளிது எண்ணி நகையாடல் -எளிது

அதனினும் எளிது - மக்கட்நகை ;


கனிது கனிது உள்ளம் - கனிது

அதனினும் கனிது - தாயுள்ளம் ;


பொழிது பொழிது வானம் - பொழிது

அதனினும் பொழிது - தாய்மை ;


கவிது கவிது மலர் கண்கள் -கவிது

அதனினும் கவிது - தாய் இன்முகம் ;


என்னுயிர் செல்வமே,

யாம்கேட்ட மொழிகளிலே இனிய மொழி

உன் மொழி அதுதான் - மழலை மொழி;


யாம்கேட்ட சொற்களிலே இனிய சொல்

உன் சொல் அதுதான் - மழலைச்சொல் ;


அதுவே மயக்கும் சொல்.

மயக்கும் சொல் கேட்பீர்

மங்கும் மற்றதை மறப்பீர்.


பெருமையுடன்,

விஜய் ஆனந்த் S