சிதறல்கள்

Friday, August 19, 2011

மரண தண்டனை










நவீன யுகத்தின் நாகரீக கொலை...

புதிய நூற்றாண்டின் தண்டனையின் உச்சஎச்சம்...


சிறையில் உள்ளவர் பலர்...

அவற்றில் உள்ள விதங்கள் பற்பல...

அங்குள்ள

மாசுபட்ட மனிதனை;

இருளும் மருளும் சூழ்ந்து

மங்கி கிடக்கும் மாந்தனை;

நாளை ஒன்று ஏன் வந்தது

என கேள்வியோடு தொடங்கும் நயவஞ்சகனை;

மன சிறையில் வெம்பி கிடக்கும் கள்ளனை;

தான் செய்யா தவறை தனதாக்கி

கரைபடும் சாந்த அறிவாளனை;


சிரைச்சேதம் செய்தால் சிந்தனை வளர்க்கா...

சிலரை வேணா சாந்தப்படுத்தும்...


மரண தண்டனை ஆலாபனை செய்யும்

ஆலமரங்களே,

கறை படிந்தவனை கல்லறை

அனுப்பி வைத்தால்

உன் மீதும் படராதோ -கறை ???


ஏழாம் அறிவை தேடும் இவ்வுலகில்

ஐந்தறிவு விலங்கு போல் வாழ்வது சரிதானோ???


ஆம்,

மரண தண்டனை மரணிக்க

மருள் நீங்கி மனம் பெற்று

சிந்தனை முன்னெடுப்போம் ....

நாகரீக கொலை தடுக்க கை கோர்ப்போம் ...

உள்ளங்களாய்... உணருவுகளாய்...


உணர்வுடன் ,

விஜய் ஆனந்த் .S

Friday, August 12, 2011

கடற்கரை வாசல்கள்








கடற்கரை காவியம் படைக்க

கவின்மிகு இடம் - என

கதை எழுதுவோர் உரைப்பர்...


ஆம்,

கடற்கரை காவியம் படைக்க மட்டுமல்ல

கலங்கரை விளக்காய்

கலங்கா மனிதரை -கருவாக்கும்

புனித மடி!


கந்தை உடுத்தி

கல்லறை செல்ல வழி தேடுவோரின்

சிந்தை மாற்றும்

வாசல் படி !


கரை மடிதனில் - கடல்

கடல் அடிதனில் - சுனாமி

அக்கரைதனில்

கறை படிந்தவரும் அமர்வர்!

கண்ணியமானவரும் அமர்வர்!

உச்சாணி கொம்பில் உள்ளவரும் கடப்பர்!

உச்சத்தை காண துடிப்பவரும் கடப்பர்!


ஆயிரம் பேர்

ஆயிரம் முறை கடந்தாலும்

அக்தே

சுனாமியே சுழன்றடித்தாலும்

தன்னிலை மாறா தகத்தகயமாய்

ஜொலிப்பாய் -கரை!!!


கடற்கரை,

கவிதை எழுத மட்டுமல்ல.

காதலரை காண மட்டுமல்ல..

சூரிய குளியல் எடுக்க மட்டுமல்ல..

தோல்வியில் துவளா

காரண காரியம் -அறி நீதி;

வெற்றியை பகிர்ந்துகொள்ளும்

பக்குவம் படிக்க -அறி சொல்;

அறிய!


தகத்தகாய தன்னிலை

அறிபவராய் மாந்தர் மாற்றம்....

வாயிலோனை வசந்தம் ஏற்கும்-தனை

வாழ்வில் - கரை....


நட்புடன்

விஜய் ஆனந்த் .S

Friday, August 5, 2011

தெரியுமா ?













ஆயிரம் பிறை கண்ட

ஆல மர

அடிவேரை யாரறிவார்?


விடலை வீரியத்தால்

காரியம் சாதித்து

காலனிடம்

வீழ்ந்த கதை யாரறிவார்?


மண்ணில் சாதித்து

விண் நோக்கி

செல்லும் மரபின் நிலை யாரறிவார்?


கண்ணீரில் விழுந்து

கயவர் சொல் கேட்டு

காலமெல்லாம் புலம்பும்

கைம்பெண் நிலை யாரறிவார்?


தன் எடையை விட

அதிகமாக

பொதி சுமக்கும் கழுதை

பொறி சுமக்கும் எறும்பு

நிலையையும் யாரறிவார்?


கனவுகளில் மிதந்து

கதையாய் வாழ்ந்து

காதலை சுமந்து

ஏந்தலான வாழ்க்கையில்

மாற்றம் ஒன்றை பழகி

துணையோடு வாழ்பவரின்

துயர இன்பத்தை யாரறிவார்?


பகுத்தறிந்து சொல்வோர் பலர்

பிறர்க்கு ;

அறிந்து கூட செய்யார்

தனக்கு ;


முடிவு தெரிந்து வாழ்வதை

விட

தத்தம் நிகழ்வுகளின்

ஆதி அந்தம் ஏற்று தெளிந்து ஓடு வாழ்வில்....


நட்புடன்

விஜய் ஆனந்த் .S