
நவீன யுகத்தின் நாகரீக கொலை...
புதிய நூற்றாண்டின் தண்டனையின் உச்சஎச்சம்...
சிறையில் உள்ளவர் பலர்...
அவற்றில் உள்ள விதங்கள் பற்பல...
அங்குள்ள
மாசுபட்ட மனிதனை;
இருளும் மருளும் சூழ்ந்து
மங்கி கிடக்கும் மாந்தனை;
நாளை ஒன்று ஏன் வந்தது
என கேள்வியோடு தொடங்கும் நயவஞ்சகனை;
மன சிறையில் வெம்பி கிடக்கும் கள்ளனை;
தான் செய்யா தவறை தனதாக்கி
கரைபடும் சாந்த அறிவாளனை;
சிரைச்சேதம் செய்தால் சிந்தனை வளர்க்கா...
சிலரை வேணா சாந்தப்படுத்தும்...
மரண தண்டனை ஆலாபனை செய்யும்
ஆலமரங்களே,
கறை படிந்தவனை கல்லறை
அனுப்பி வைத்தால்
உன் மீதும் படராதோ -கறை ???
ஏழாம் அறிவை தேடும் இவ்வுலகில்
ஐந்தறிவு விலங்கு போல் வாழ்வது சரிதானோ???
ஆம்,
மரண தண்டனை மரணிக்க
மருள் நீங்கி மனம் பெற்று
சிந்தனை முன்னெடுப்போம் ....
நாகரீக கொலை தடுக்க கை கோர்ப்போம் ...
உள்ளங்களாய்... உணருவுகளாய்...
உணர்வுடன் ,
விஜய் ஆனந்த் .S
மரண தண்டனை ஆலாபனை செய்யும்
ReplyDeleteஆலமரங்களே,
கறை படிந்தவனை கல்லறை
அனுப்பி வைத்தால்
உன் மீதும் படராதோ -கறை ???
ஏழாம் அறிவை தேடும் இவ்வுலகில்
ஐந்தறிவு விலங்கு போல் வாழ்வது சரிதானோ???
supper poem
congratulation"
வலிதரும் கவிதை வரிகளால் என்
ReplyDeleteமனத்தைக் கவர்ந்த தங்களது
வலைத்தளம் மென்மேலும் சிறப்புற
வாழ்த்துகின்றேன் .தளத்தில் இணைந்துவிட்டேன் .
முடிந்தவரைக் கருதிடுகின்றேன் .நன்றி பகிர்வுக்கு .