சிதறல்கள்

Friday, March 27, 2020

உயிர்கொல்லியின் சமத்துவம்...



ஏகாதிபத்தியம் முதல் ஏழையரசு வரை
தொட துணிந்த உயிரி;

மாவட்ட எல்லை,
மாநில எல்லை,
நாடுகளின் எல்லை,
கண்டங்களின் எல்லை கடந்த உயிரி ;

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
நால்வர்ண ஆலாதித்தவரை
ஒதுங்க வைத்த உயிரி ;

கருப்பு வெள்ளை 
என பேதபடுத்தியவரை
பதுங்க வைத்த உயிரி ;

மதம் பேசி 
மானிடரை பிளவு படுத்தியவனை
மயானம் எண்ணி 
அச்சம் கொள்ள வைத்த உயிரி ;

முப்பாலில் ஒன்றான
தன்பால் தான் உயர்ந்தது 
என்று எண்ணியவனை
தனிமை படுத்திய உயிரி;

ஆத்திகவாதி முதல் நாத்திகவாதி வரை
வியாதி நினைத்து 
விலக வைத்த உயிரி;

ஒலிம்பிக்கில் 
உச்சம் தொடுபவனை
தொற்றில் உச்சம் 
தொட வைத்த உயிரி ;

இது நிறைவடைய,

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ,
தீதும் நன்றும் பிறர் தர வாரா ,
சுத்தம் அண்டம் காக்கும் ,
என்று எண்ணி

நேனோ உயிரி உலகத்துக்கு
கொடுத்த
அச்சம்  தற்காலிகம் ;
உணர்த்திய
சமத்துவம் நிரந்தரம் ;


விஞ்ஞான உலகில்  
மெய் பொருள் அறிந்து -விலாசம் பெறுவோம் ;
Bio War யை Bio Epic யாக மாற்றுவோம்;
விகாரி நிறைவுற்று சார்வாரியில்
சூழல் காத்து 
கிருமியில்லா உலகம் செய்வோம்
கடவுளை நினைத்து இயற்கையை போற்றி …


உணர்வுடன்,

விஜய் ஆனந்த்