
பார் வியக்கும் மைந்தனை ஈன்ற -உன்னை
நிலம் இறக்க மறுத்த கயவாளிகளை உலகறியும் ;
அந்தோ தமிழா!
என்ன பாவம் செய்தாள் இந்த அன்னை ?
தமிழனை தன்மானத்தோடு தன் -நிலத்தில்
வாழ முயற்சித்த போராளியை ;
தமிழன் தலை நிமிர செய்ய - தன்
வாழ்வு இழந்த தனயனை;
உலகுக்கு அளித்தது குற்றமா?
வேற என்ன குற்றம் சொல்லும் -இந்த
கயமை படைத்த உள்ளங்கள் ???
எண்பது அகவையில்- உனை
வானில் அலைக்களித்த ஈனர்களுக்கு
காலம் பதில் சொல்லும் நாள் எந்நாளோ ?
அந்நாள் கனவுகள் மெய்படும்.
இந்த கயவர்கள் கழுவில் ஏற்றப்படுவார்கள்
சரித்திரத்தின் பக்கங்களாய் ???
உணர்வுடன் ,
விஜய் ஆனந்த் S
supper
ReplyDeleteFirst Class Ananth!!!
ReplyDeleteஇறு(ர)க்கமான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDelete