
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!
அகத்தை அன்போடும்;
புறத்தை புன்னகையோடும்;
கொடுத்த மொழி!
அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!
அறிவியலின் அடிநாதம்;
ஆன்மிகத்தின் உயிர்நாதம்;
அரசியலின் அரிச்சுவடி;
இலக்கியத்தின் இன்பம்;
அருளிய மொழி!
அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!
ஐம்பெரும்காப்பியமும் ,வான்புகழ் வள்ளுவமும்;
எட்டு தொகை நூல்களும்;
எண்ணில்லா சிந்தனை சிற்பிகளையும்;
கொடையாய் இவ்வுலகுக்கு அளித்த மொழி!
அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!
கல் தோன்றிய காலத்துக்கு முன்னே - தோன்றிய
ஒப்பில்லாமொழி !
இலக்கண, இலக்கியம் ஒருங்கே அமைந்த மொழி!
அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!
உணர்வுடன் ,
விஜய் ஆனந்த் S
உணர்வுடன் ,
விஜய் ஆனந்த் S
எமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு அழகு சேர்த்த
ReplyDeleteகவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள் சகோதரரே .
தொடர்ந்தும் முயற்சியுங்கள் எதிர்காலத்தில் உங்கள்
முயற்சிகள் யாவும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .