சிதறல்கள்

Friday, August 12, 2011

கடற்கரை வாசல்கள்








கடற்கரை காவியம் படைக்க

கவின்மிகு இடம் - என

கதை எழுதுவோர் உரைப்பர்...


ஆம்,

கடற்கரை காவியம் படைக்க மட்டுமல்ல

கலங்கரை விளக்காய்

கலங்கா மனிதரை -கருவாக்கும்

புனித மடி!


கந்தை உடுத்தி

கல்லறை செல்ல வழி தேடுவோரின்

சிந்தை மாற்றும்

வாசல் படி !


கரை மடிதனில் - கடல்

கடல் அடிதனில் - சுனாமி

அக்கரைதனில்

கறை படிந்தவரும் அமர்வர்!

கண்ணியமானவரும் அமர்வர்!

உச்சாணி கொம்பில் உள்ளவரும் கடப்பர்!

உச்சத்தை காண துடிப்பவரும் கடப்பர்!


ஆயிரம் பேர்

ஆயிரம் முறை கடந்தாலும்

அக்தே

சுனாமியே சுழன்றடித்தாலும்

தன்னிலை மாறா தகத்தகயமாய்

ஜொலிப்பாய் -கரை!!!


கடற்கரை,

கவிதை எழுத மட்டுமல்ல.

காதலரை காண மட்டுமல்ல..

சூரிய குளியல் எடுக்க மட்டுமல்ல..

தோல்வியில் துவளா

காரண காரியம் -அறி நீதி;

வெற்றியை பகிர்ந்துகொள்ளும்

பக்குவம் படிக்க -அறி சொல்;

அறிய!


தகத்தகாய தன்னிலை

அறிபவராய் மாந்தர் மாற்றம்....

வாயிலோனை வசந்தம் ஏற்கும்-தனை

வாழ்வில் - கரை....


நட்புடன்

விஜய் ஆனந்த் .S

2 comments:

  1. ''....கலங்கரை விளக்காய்
    கலங்கா மனிதரை -கருவாக்கும்
    புனித மடி!...''
    கடற்கரை கவின்மிகு இடம்
    good.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. கரையோர ஆராய்ச்சி அருமை தொருங்கள் சிறப்பான பகிர்வோடு வாழ்த்துக்கள்

    ReplyDelete