சிதறல்கள்

Friday, August 9, 2013

எங்கே ---- வழி தேடி????








எங்கே தெளிவோம் ....
கனவு காணும் காலந்தன்னில்
கதையாய் உணர்வை தொடும் 
கள்வனை நோக்கும் போது;

எங்கே உணர்வோம் ....
கற்பாய் உள்ள நட்புதன்னில்
கானல் நீராய் கலைபவரை
காணும் போது;




எங்கே போற்றுவோம் ....
அகழ்வாரை தாங்கும் நிலம்
போல
மாந்தர் தன்னில்
உள்ள(ம்) இகழ் செய் புகழ்வாரை-ஒதுக்கும்
போதியனை அறியும் போது;



எங்கே துள்ளுவோம் ....
துணிந்ததை தனித்து நிறை செய்தன்
கனிந்து காரியம் நிறைவேற்றி
துணை தன்னை போற்றுபவரை தெரியும் போது;


 எங்கே களிப்போம் ....
மலர் தன் இனமாய்
உணர்ந்த மாந்தன் இனம்தன்னின்
இன்பம் பெருக்க உணர்வூட்டுபவனை
இனம் காணும் போது;




எங்கே நகைப்போம்....
வெளியில் அண்ட வெளிதன்னில்
தலைவனாய் அறிசெய்து
உணர்வுதன்னில் அடிமையாய் 
கொடநாடு நோக்கும்
மைந்தனை அறியும் போது;


இத்துணையும்
எந்தன் கணையாய்
உயிரில் கருவாய்
நினைவில் தருவாய்
அன்பில் மருவாய் -வரும்
காலத்தின் கட்டாயம் தான்
எங்கே நம் உணர்வுகள் ....
எங்கேயும் நம் உணர்வுகள் ....
நினைவுகளாய் நித்திரையின் கனவுகளாய்....

உணர்வுடன்   

விஜய் ஆனந்த் .S
-->