சிதறல்கள்

Friday, July 15, 2011

காமராஜ் - நேர்மையின் மறைநூல்















வாழும்போதே

நேருவால் சிலை திறக்கப்பட்ட

கருப்பு காந்தியே!


சிவகாமி பெற்றெடுத்த சிகரம்

நீதானே...

சாஸ்திரியையும் கை காட்டினாய்!

இந்திராவையும் இமயம் ஏற்றினாய்!

இந்தியாவிற்கு தலைமை பொறுப்பேற்க...

ஆம்

உனை உலகம் சொல்லும்

KING MAKER என்று ... இல்லை

நான் சொல்கிறேன் நீ QUEEN MAKER யும் கூட...


சத்திய மூர்த்தி கண்டறிந்த

சத்தியமான கோஹினூர் வைரமே!


பெரியாரின் பேரன்பு;

அண்ணாவின் குலக்கொழுந்து;

ஜீவாவின் அரும் நண்பன்;

கலைஞரின் (கள்ள) காதலன்;

அகிலத்தின் நேர்மையின் மறுபிறப்பு -நீ தானே


அரிஜனை அறநிலைத்துறை அமைச்சராக்கி,

அரியணையில் ஏற்றி,

ஆச்சாரியர்களுக்கு ஆழ்நித்திரை வழங்கியவரே !


ஈஸ்வரன் உள்ள இடத்துக்கு

பரமேஸ்வரனை அனுப்பி

சமத்துவத்திக்கு வித்திட்டவரே!


கல்வி கற்றோர் ஆயிரம் பேர் அரியணையில்

அமர்ந்தாலும்--

பள்ளிக்கல்வி அறியா உலககல்வியின் பிதாமகன்

உன் உதிரத்தில் தான்

சுதந்திரத்தையும் வாங்கி தந்ததாய்!

ஜனநாயகத்தையும் அரியணை ஏற்றினாய்!

பண நாயகத்தையும் கருவறுத்தாய்


அதனால்தான்

பகுத்தறிவு பகலவனால்

பச்சை தமிழன் என போற்றப்பட்டாய்...


தமிழகத்தை ,

கல்லாதோர் எங்கும் இல்லாதோர்

உள்ள மாநிலமாக்க விதை விதைத்தாய் !

தொழில் புரட்சி தொடங்கும்

தொழுவம் ஆக்கினாய்!

குலகல்வியை காணாமற் செய்தாய்!

அனல் மின் நிலையம் உருவாக்கினாய்!

அணைகள் பல கட்டினாய்!

தொழில்பேட்டை பற்பல நாட்டினில் பாச்சினாய்!


எதிர்கால தலைமுறை எண்ணி

ஏராளம் செய்தாய் ...

அதனால் ஏளனம் செய்தவரும்

ஏணியாக உனையாக்கி ஏறுமுகம் கண்டனர்...


காலம் சென்றது

கடமை வென்றது

சத்தியம் நிலைத்தது உன் வடிவில்

இன்னும் ஒரு நூற்றாண்டு என்ன

அதற்கு மேலும் ஆனாலும்

இமயமும் சொல்லும்....

இந்தியாவின் எவரெஸ்ட் நீ என்றும்...

நேர்மையின் மறை நூல் உன் வரலாறு என்றும்...


கல்விகண்ணை திறந்த கண்ணியவான்

உனை காலன்

பற்றியபோதுதான்

நெருப்பே கேட்டது நான் ஏன் பிறந்தேன் என்று...


மரியாதையுடன்,

விஜய் ஆனந்த் .S