சிதறல்கள்

Thursday, December 30, 2010

2011











மண்ணில் பிறக்கும் மனிதரில்

மகுடம் தரிக்கும்

மனிதர் சிலரே !

அதில் முதலிடம் பெற சூளுரைப்போம் !!


உள்ளத்தால் உயர்ந்து

கயமையை வென்று

காலம் போற்றும் புனித இதழ்

தொடங்குவோம் 2011ல் !


ஆசையை துறந்தவன் புத்தன்

அடுத்தவர் உள்ள ஆசையை

அறிந்து

அன்பால் அருளி

புத்தனுக்கும் மூத்தவன் ஆவீர் !!


புவி வெப்பமானால் பூலோக

தட்ப வெட்பம் மாறும் ;

காலத்தே நாம் உறுதி பூண்டால்

பனிமலையா

வரும் கலகமும்

நம் காலடியில் மண்டியிடும்

அக்தே

தொடங்கும் நாள் இந்த புத்தாண்டு !!


இன்று பிறக்கும் புத்தாண்டு

இனிது ! இனிது !! இனிது !!!


இதனால் நமக்கு 2011

புதிது ! புதிது !! புதிது !!!


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சொல்வோம் ;

இனிதே 2011 தொடங்குவோம்...


வாழ்த்துகளுடன்

விஜய் ஆனந்த் S

Thursday, December 16, 2010

இசை ப்ரியா














இன்னிசை பாடி இளைய நிலா

காணும் வயதில் ;

மண்ணின் விடுதலைக்காக -மரித்த

மானமிகு மஞ்சள் புறாவே !


நானிலம் போற்றும் நாயகன் - பிரபாகரனின்

இதய ஆசைகள் உதயமாக ;

இனிதே உன் செவ்வாயால் - சுதந்திர தாகத்தை

உலகுக்கு உரைக்கும் வீர வேந்தே !


புறநானுற்று தமிழச்சி கூறும் - நல்லுலகத்தை

இந்நூற்றாண்டில் நிறைவேற்றிய

என் இனிய தமிழச்சியே !


இசையான உன் புறமேனியை - ஊர்

பார்க்க வைத்த வீணர்களின் -ஆன்மாக்கள்

மரம் தேடி அலையும் காலமும் வரும்,

நேரமும் நெருங்கும் ?


இன்பம் மட்டுமே விரும்பும்

இன்றைய நவீன மகளிர் - ஊடே

தன் இன்னுயிர் நீத்த

21 ம் நூற்றாண்டின் வேலு நாச்சியாரே !


நீ மாண்டாலும் உன் ஆன்மா

உரக்க சொல்லும் ஈழத்தின் அவலத்தை !

ராஜபக்ஷே போன்ற வல்லுறுகளுக்கு -

காலம் நெருங்கும் வேளை ;


ஈழ தமிழ் தேசிய கீதத்தை தடை- செய்த

சண்டாளனுக்கு

லண்டனில் விழுந்தது அடிகளின் ஆரம்பம் ;

இனியும் இக்கதை தொடர்ந்தால் - ஓநாய்களுக்கு

விழும் அடி எழும் தமிழீழம் !


என்பதை உரைக்கும் தமிழ் நெஞ்சம் ,

அதனை உருவாக்கும் உன் தியாகம் i


உணர்வுடன்

விஜய் ஆனந்த் S