சிதறல்கள்

Friday, April 10, 2020

சுற்றமும் சுழலும்



வானம் பார்த்து
பறக்க ஆசைப்பட்டோம் –பறந்தோம் ;
சிந்தனையும் இல்லாமல் ,சிறகுகள் இல்லாமல்
வளிமண்டலத்தின்
ஓசான் படலத்தை கிழித்து` …

நிலம் பார்த்து
நிற்க ஆசைப்பட்டோம் - நின்றோம் ;
நினைவுகள் இல்லாமல் ,நிம்மதியும் இல்லாமல்
விவசாய நிலம் அழித்து
மா-கட்டடம் எழுப்பி…

நீர் பார்த்து
மிதக்க ஆசைப்பட்டோம்-மிதந்தோம்;
நீச்சலும் தெரியாமல், பதட்டமும் அறியாமல்
அணு கழிவுகளை
கொட்டும் கலமாக்கி…

நெருப்பை பார்த்து
புகைக்க ஆசைப்பட்டோம்-புகைத்தோம்;
புதியன எண்ணாமல், பழையன கழிக்காமல்
எண்ணிலடங்கா நாட்களாய்
எரியும் நீரக கரிமமாக்கி ….

காற்றை பார்த்து
உலகம்
விரிவடைய ஆசைப்பட்டோம் -விரிந்தோம்
விந்தைகள் அறியாமல், விஷயம் புரியாமல்
பசுமை வளியை அழித்து
புவியை வெப்பமாக்கி …

Thursday, April 2, 2020

பரிவர்த்தனை



விலாசம் தேடி
வீதியில் அலைந்த
சிவப்பு விளக்கு மங்கை நோக்கி
நோக்கினான் அயல் தேசத்து அயலான்
பரிமாற்றம் நடந்தது
பரிவர்த்தனை முடிந்தது
HIVயும் கொரானாவும்
எது முந்தும் எது முடியும்
ஈஸாவுக்கும் தெரியுமா!!!
இன்ஸாவுக்கும் அறியுமா!!!
முடிவு செயலுக்கு தானே ??/….
மாறா மதம் எதற்கு மனிதம் போற்றும் நல்நடத்தை போதுமே….


தேடலுடன்,

விஜய் ஆனந்த்