சிதறல்கள்

Saturday, October 4, 2014

நகைமுரண்



பருவத்தே பயிர் செய்ய சொல்லும்
பி .டி விதை விற்கும் மரண வியாபாரி…

கடவுளை நம்பினார் கைவிடபடார்
என எண்ணிய கோயிலுக்குள்
ஆண்டவன் விக்ரகம் பூட்டிய அறைக்குள்…

வஞ்சகம் பேசேல் எனும்
நயமாக பேசும் நாக்கு வியாபாரிகள்…




      கடமையே கண்ணா இரு எனும்
ஊரார்
உடைமையில் உயிர் வளர்க்கும்
அதிகார ஒட்டுண்ணிகள்…

ஞயம்பட உரைக்க கூறும்
110 விதியை நியாயம் இல்லாமல்
அறுவடை செய்யும் ஆட்சியாளர்கள்…









ஊரில் பாந்தமாக பேசும்
உறவினிடே 
ஊறு விளைக்கும் ஊழ்வினை..




அழுகாச்சி மந்திரி சபையில்
வாய்தா கேட்டு
பின்னால் செல்லும் மாண்புமிகு…


காசேதான் கடவுளடா-சில 
மருத்துவனுக்கு
மனித உயிரே காசுதானடா..
.
Time to lead வாசகத்தை கூட
பிரசுரிக்க வலிமை இல்லாத நாளைய தமிழகம்..

3 லட்சம் தமிழன் மூச்சடைத்து
முள்ளிவாய்க்காலில்
முகாரி ஒலித்தபோது உணர்வில்லாதவன்
3 நாள் பிணை தாமதத்துக்கு
முடி இழக்கும்,மண்சோறு சாப்பிடும்,
ஒப்பாரி ஓலமிடும் நாணயமானவர்கள் ..




எதிர்ப்பதும்,மாறுபடுவதும்
மட்டும் முரணல்ல-நகைப்பதும்,
நாணயம் இல்லாதவனை
நா-நிலம் நகைத்து உரைப்பதும்
முரணே... நகை முரணே



உணர்வுடன்
   
விஜய் ஆனந்த் .S

No comments:

Post a Comment