சிதறல்கள்

Friday, September 9, 2016

குற்றமே தண்டனை


நதியோரம் நாகரிகம் தோன்றியது -ஆதிகாலம்
நதியால் நாதியற்று நிற்கும் தலைமுறையால் ;
நாகரீகம் பாழ்பட்டு நாளைய தலைமுறையின் 
கோடரி காம்பு ஆனது - கலிகாலம்...




நடந்தாய் வாழி காவிரி -கானல் ஆயிற்று;
தாகம் தீர்த்த தன் பொருநை -மணல் மாஃபியா
கூடாரம்  ஆயிற்று;
பாசனத்தின் மூல நதி -பாலாறு
கழிவு நீர் கிடங்கு  ஆயிற்று;



தேடியவருக்கு திரவியம் தரும் -தென் பெண்ணை 
தேடும் நதி  ஆயிற்று;
மீன் பிடி கூவம் மீளா துயரம்  ஆயிற்று;
காஞ்சிமா நதி காய்ந்து போன sludge drying bed  ஆயிற்று....



கையறு நிலைக்கு கையந்தாமல் வாழ
காலத்தின் தேவை அம்மா இட்லி அல்ல
பாதுகாக்கப்பட்ட நாகரீக தொட்டில் (நதி)...

அடுக்க அடுக்க அடங்கா மனித தவறு
மூச்சை அடக்கும் நாளை !!!

இன்றைய தலைமுறையின் குற்றம்
நாளைய தலைமுறைக்கு தண்டனையா ??


குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை ஏற்பு சரி...
வருங்கால தலைமுறைக்கும் ஆயுள் தண்டனை சரியா???


வினையின் பாவம் விதைத்தவனுக்கு,
விதையே பாவமாய் PT வழி வந்தால்,
நாளை தலைமுறைக்கு மருந்தே உணவாகும்...







நம்மாழ்வார் வாக்கும்
சுவாமி நாதன் போக்கும்-நிலை பெற்றால்
கணினி உலக கண்ணும் ,உழவனின் கண்மாயிம் திறக்கும்
கார்பரெட் அடிமை கயலாய் கருத்துறும்..
மரபணு மாற்றா மரபு உருபெறும் நாளை.....
 





ம்
நீரின்றி அமையா உலகு
நீர் வழிச் சாலை இன்றி அமையா நாளைய தமிழகம்....

 













உணர்வுடன்
  
விஜய் ஆனந்த் .S
-->