Friday, September 9, 2016

குற்றமே தண்டனை


நதியோரம் நாகரிகம் தோன்றியது -ஆதிகாலம்

நதியால் நாதியற்று நிற்கும் தலைமுறையால் ;
நாகரீகம் பாழ்பட்டு நாளைய தலைமுறையின் 
கோடரி காம்பு ஆனது - கலிகாலம்...
நடந்தாய் வாழி காவிரி -கானல் ஆயிற்று;

தாகம் தீர்த்த தன் பொருநை -மணல் மாஃபியா
கூடாரம்  ஆயிற்று;

பாசனத்தின் மூல நதி -பாலாறு
கழிவு நீர் கிடங்கு  ஆயிற்று;தேடியவருக்கு திரவியம் தரும் -தென் பெண்ணை 
தேடும் நதி  ஆயிற்று;

மீன் பிடி கூவம் மீளா துயரம்  ஆயிற்று;

காஞ்சிமா நதி காய்ந்து போன sludge drying bed  ஆயிற்று....கையறு நிலைக்கு கையந்தாமல் வாழ
காலத்தின் தேவை அம்மா இட்லி அல்ல
பாதுகாக்கப்பட்ட நாகரீக தொட்டில் (நதி)...

அடுக்க அடுக்க அடங்கா மனித தவறு
மூச்சை அடக்கும் நாளை !!!

இன்றைய தலைமுறையின் குற்றம்
நாளைய தலைமுறைக்கு தண்டனையா ??


குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை ஏற்பு சரி...
வருங்கால தலைமுறைக்கும் ஆயுள் தண்டனை சரியா???


வினையின் பாவம் விதைத்தவனுக்கு,
விதையே பாவமாய் PT வழி வந்தால்,
நாளை தலைமுறைக்கு மருந்தே உணவாகும்...நம்மாழ்வார் வாக்கும்
சுவாமி நாதன் போக்கும்-நிலை பெற்றால்
கணினி உலக கண்ணும் ,உழவனின் கண்மாயிம் திறக்கும்
கார்பரெட் அடிமை கயலாய் கருத்துறும்..
மரபணு மாற்றா மரபு உருபெறும் நாளை.....
 

ம்

நீரின்றி அமையா உலகு
நீர் வழிச் சாலை இன்றி அமையா நாளைய தமிழகம்....

 

உணர்வுடன்
  
விஜய் ஆனந்த் .S
-->

Friday, May 1, 2015

மௌனம்பேசிய மொழிக்கு நித்திரை
பேசா சொல்லுக்கு மாத்திரை -மௌனம்;

காரண காரியம் ஆயிரம் இருப்பின்
கனவுகளின் கண்ணீர் துளிகள் –மௌனம்
காலத்தின் ஞானம்
கவிதையின் மூலம்
ஆத்மாவின் ஆருயிர் - மௌனம்ம்

கன்னியின் மௌனம் கனவு தொலைக்கும்;
கவிஞனின் மௌனம் கவிதை சுரக்கும்;
முதியவரின் மௌனம் காலத்தே உரைக்கும்;

ஆட்சியாளரின் கள்ள மௌனம் கலகம் பிறக்கும்;
ஊடகத்தின் மௌனம் பொய்யை உருவாக்கும்;
இல்ல துணையின் மௌனம் மனை சிறக்கும்;
மண்ணின் மௌனம் புவி தட்டை புன்னகைக்கும்;
மௌனிக்கும் முனிவன் முற்றும் துறப்பான்
காலத்தே மௌனிக்கும் மாந்தன் -தன்
கனவுகளை கருவாய் தரித்து
தளிரை உருமாற்றும் தருவாய்........

உணர்வுடன்
  
விஜய் ஆனந்த் .S
-->

Saturday, October 4, 2014

நகைமுரண்பருவத்தே பயிர் செய்ய சொல்லும்
பி .டி விதை விற்கும் மரண வியாபாரி…

கடவுளை நம்பினார் கைவிடபடார்
என எண்ணிய கோயிலுக்குள்
ஆண்டவன் விக்ரகம் பூட்டிய அறைக்குள்…

வஞ்சகம் பேசேல் எனும்
நயமாக பேசும் நாக்கு வியாபாரிகள்…
      கடமையே கண்ணா இரு எனும்
ஊரார்
உடைமையில் உயிர் வளர்க்கும்
அதிகார ஒட்டுண்ணிகள்…

ஞயம்பட உரைக்க கூறும்
110 விதியை நியாயம் இல்லாமல்
அறுவடை செய்யும் ஆட்சியாளர்கள்…

ஊரில் பாந்தமாக பேசும்
உறவினிடே 
ஊறு விளைக்கும் ஊழ்வினை..
அழுகாச்சி மந்திரி சபையில்
வாய்தா கேட்டு
பின்னால் செல்லும் மாண்புமிகு…


காசேதான் கடவுளடா-சில 
மருத்துவனுக்கு
மனித உயிரே காசுதானடா..
.
Time to lead வாசகத்தை கூட
பிரசுரிக்க வலிமை இல்லாத நாளைய தமிழகம்..

3 லட்சம் தமிழன் மூச்சடைத்து
முள்ளிவாய்க்காலில்
முகாரி ஒலித்தபோது உணர்வில்லாதவன்
3 நாள் பிணை தாமதத்துக்கு
முடி இழக்கும்,மண்சோறு சாப்பிடும்,
ஒப்பாரி ஓலமிடும் நாணயமானவர்கள் ..
எதிர்ப்பதும்,மாறுபடுவதும்
மட்டும் முரணல்ல-நகைப்பதும்,
நாணயம் இல்லாதவனை
நா-நிலம் நகைத்து உரைப்பதும்
முரணே... நகை முரணேஉணர்வுடன்
   
விஜய் ஆனந்த் .S

Tuesday, July 29, 2014

நினைவின் கீறல்....நிலையில்லா உலகில்
நினைவு போற்ற ஈட்ட -விழை
நினைவுகளே -நல்நினைவுகளே சம்பாத்தனை ...

பேறு முடிந்து பூவுலகில் அடி தொழ - வழி
ஈன்றோரே பேறு அவன் தம் இறைபேறு ....கால் சட்டை வயதில்
கால் நூற்றாண்டு முன்- கனவுகளே
நாளைய கனவுகளே
அவன் தம் நல்வழி முன்னோடி ...

காளை பருவத்தில் 
கருமத்தை எண்ணா - மனதை 
உருமாற்றும் நல் நட்பே
கைமாறு அறியா காலக்கண்ணாடி...

முதிர்வு எட்ட நேரும் காலந்தனில்
முயற்சி ஒன்றே முடிவை தரும் தளிர் ...


ஒன்று இரண்டாய் இணை நேரத்தில்
கணையாய் மாறும்- கணையாழி
அவன்தம் இணையாளி...

ஏற்றத்தில் இறக்கம் தரும் இறையை
போற்ற விளையும் மனமே
அவன்தம் பூர்வ புண்ணியம்...


கால மாற்றத்தில்
கணினி யுகத்தில்
கண்ணிமைக்கும் கணத்தில்
கடனாய் வரும் நினைவுகளே
தருவாய் மாறும் முன்னேற்றங்களே
உருவாய் உயிர்பெரும் உளியின் ஓசை,
நெஞ்சத்தின் நினைவின் கீறல் .. 

நித்திரையில் வந்து
முத்திரையாய் முற்று பெரும் -நினைவுகளே
நினைவில் நில்லும் -நினைவின் கீறல்கள்
காலதேவனின் கற்பனை வாயில்கள் ...உணர்வுடன்   
விஜய் ஆனந்த் .S
-->