சிதறல்கள்

Friday, August 5, 2011

தெரியுமா ?













ஆயிரம் பிறை கண்ட

ஆல மர

அடிவேரை யாரறிவார்?


விடலை வீரியத்தால்

காரியம் சாதித்து

காலனிடம்

வீழ்ந்த கதை யாரறிவார்?


மண்ணில் சாதித்து

விண் நோக்கி

செல்லும் மரபின் நிலை யாரறிவார்?


கண்ணீரில் விழுந்து

கயவர் சொல் கேட்டு

காலமெல்லாம் புலம்பும்

கைம்பெண் நிலை யாரறிவார்?


தன் எடையை விட

அதிகமாக

பொதி சுமக்கும் கழுதை

பொறி சுமக்கும் எறும்பு

நிலையையும் யாரறிவார்?


கனவுகளில் மிதந்து

கதையாய் வாழ்ந்து

காதலை சுமந்து

ஏந்தலான வாழ்க்கையில்

மாற்றம் ஒன்றை பழகி

துணையோடு வாழ்பவரின்

துயர இன்பத்தை யாரறிவார்?


பகுத்தறிந்து சொல்வோர் பலர்

பிறர்க்கு ;

அறிந்து கூட செய்யார்

தனக்கு ;


முடிவு தெரிந்து வாழ்வதை

விட

தத்தம் நிகழ்வுகளின்

ஆதி அந்தம் ஏற்று தெளிந்து ஓடு வாழ்வில்....


நட்புடன்

விஜய் ஆனந்த் .S

2 comments:

  1. முடிவு தெரிந்து வாழ்வதை

    விட
    தத்தம் நிகழ்வுகளின்
    ஆதி அந்தம் ஏற்று தெளிந்து ஓடு வாழ்வில்....
    உண்மை தான் ஆனந்!
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. மண்ணில் சாதித்து
    விண் நோக்கி
    செல்லும் மரபின் நிலை யாரறிவார்?
    கண்ணீரில் விழுந்து

    கயவர் சொல் கேட்டு
    காலமெல்லாம் புலம்பும்
    கைம்பெண் நிலை யாரறிவார்?




    மனதை நெகிழவைக்கும் வரிகள்...
    அனைத்தும் அருமையான வரிகள்...
    அன்புடன் பராட்டுக்கள்..

    http://sempakam.blogspot.com/

    ReplyDelete