
தேடும் போது விழி முன் வரா தேவதை
தேநீர் அருந்தும் போது வீதியில் வருவாள்...
ஆயிரம் கண்கள் தேடினாலும் தெரியா
ஆண்டவன் ;
புறக்கண்ணை மூடினால் அகக்கண்ணில் தெரிவான்...
தேர்வு அறையில் புலப்படா விடை
பேருந்தில் வரும் போது தோன்றும்...
கோடி செலவிட்டு வெற்றி பெறா
அரசியல்வாதி;
கொடி மட்டும் கட்டும் போதே ஜெயிப்பான்...
Ctrl+F போட்டு கிடைக்கா solution யும் ;
F1 போட்டு கண்டறியா Source யும் ;
Keyboard யே தொடாத போது தோன்றும்...
நாள் முழுவதும் சண்டை போட்டு வரா முடிவு
4 நிமிட அமைதியில் கிடைக்கும்...
வாழ்க்கை என்பது எதிர் பார்ப்பது அல்ல
எதிர்ப்பை பார்ப்பது...
இதற்கு பெயர் முரண்பாடு அல்ல
இயற்கையின் வெளிபாடு....
நட்புடன்
விஜய் ஆனந்த் S