சிதறல்கள்

Friday, August 9, 2013

எங்கே ---- வழி தேடி????








எங்கே தெளிவோம் ....
கனவு காணும் காலந்தன்னில்
கதையாய் உணர்வை தொடும் 
கள்வனை நோக்கும் போது;

எங்கே உணர்வோம் ....
கற்பாய் உள்ள நட்புதன்னில்
கானல் நீராய் கலைபவரை
காணும் போது;




எங்கே போற்றுவோம் ....
அகழ்வாரை தாங்கும் நிலம்
போல
மாந்தர் தன்னில்
உள்ள(ம்) இகழ் செய் புகழ்வாரை-ஒதுக்கும்
போதியனை அறியும் போது;



எங்கே துள்ளுவோம் ....
துணிந்ததை தனித்து நிறை செய்தன்
கனிந்து காரியம் நிறைவேற்றி
துணை தன்னை போற்றுபவரை தெரியும் போது;


 எங்கே களிப்போம் ....
மலர் தன் இனமாய்
உணர்ந்த மாந்தன் இனம்தன்னின்
இன்பம் பெருக்க உணர்வூட்டுபவனை
இனம் காணும் போது;




எங்கே நகைப்போம்....
வெளியில் அண்ட வெளிதன்னில்
தலைவனாய் அறிசெய்து
உணர்வுதன்னில் அடிமையாய் 
கொடநாடு நோக்கும்
மைந்தனை அறியும் போது;


இத்துணையும்
எந்தன் கணையாய்
உயிரில் கருவாய்
நினைவில் தருவாய்
அன்பில் மருவாய் -வரும்
காலத்தின் கட்டாயம் தான்
எங்கே நம் உணர்வுகள் ....
எங்கேயும் நம் உணர்வுகள் ....
நினைவுகளாய் நித்திரையின் கனவுகளாய்....

உணர்வுடன்   

விஜய் ஆனந்த் .S
-->

Friday, July 5, 2013

சா-தீ.......



பெரியார் பிறந்த மண்ணில்
சாதிய தீயை மூட்டி
இளவரசனை மகுடம் துறந்து மயானம்
செல்ல தூண்டிய மகா-ஆத்மாக்களே....

சாதியால் சதி செய்து
சமரசம் செய்யாமல்-மதியால்
குணம் பெற்று மீதமுள்ள
திவ்யாக்களை
தேசத்தில் வாழ உணர் வர்-உணர்வை...

கொலைக்கும் தற்கொலைக்கும்
இடையே சில தற் குறிகளின்
சா-தீய தூண்டல்களே....

ஆம்...

தீயே உனக்கு தீ மூட்டும்- நாளே
இம்
சா-தீயே உனக்கு -தீ
வைக்கும் நாளே

அன்பான அருள் நடப்பவர்
அகம் மகிழும் ....
ஆண்டவனும் ஆள்பவனும் உளர்
என மக்கள் மனம் தளிராய் குளிரும் ....

தர்ம புரியில் கர்மம் தொலைந்து தர்மம் ஒளிரும்......

உணர்வுடன்   

விஜய் ஆனந்த் .S

Sunday, November 6, 2011

இது ஒரு மழைக்காலம்














நீரின்றி அமையா உலகு

நீரே நின்று வடியா - சென்னை !!


நேற்று பெய்த மழையில்

இன்று முளைப்பது காளான் அல்ல...

கன்னிப்பெண் காலனுடன் – மிதவையாய்...


இந்திய வரைபடம் Highways

வழிதனில் - குண்டும் குழியுமாய்...








குடைக்குள் உள்ள மனிதர்

நீர் அடிதனில் முக்கால் நிரம்பி...


பருவமழை பெய்தால்

பள்ளிக்கு மட்டும் விடுமுறை அல்ல

பள்ளியறையில் உறங்குவருக்கும் தான்....


வடிகால் அமைக்கா அரசு

அண்ணாவுக்கும் நாமம் பாடும்...

அண்ணா நூலகத்துக்கும் பட்டை நாமம் போடும்...


அணுவிலும் அனலிலும்

மின்சாரம் தேடும் அரசே..

வடியும் நீர் தனில் Power எடுத்தால்

உந்தன் Powerயும் புலப்படும்...

கழிவில்லா மின்சாரம் வரும்

கலங்கரை விளக்காய் - நாளை தலைமுறைக்கு...








மழை நீர் சேமித்தால்

நிலத்தடி நீரும் உயரும்

Earthquake Zone யும் மாறும்,...


நட்புடன்

விஜய் ஆனந்த் .S

Thursday, October 13, 2011

இயற்கை











தேடும் போது விழி முன் வரா தேவதை

தேநீர் அருந்தும் போது வீதியில் வருவாள்...


ஆயிரம் கண்கள் தேடினாலும் தெரியா

ஆண்டவன் ;

புறக்கண்ணை மூடினால் அகக்கண்ணில் தெரிவான்...


தேர்வு அறையில் புலப்படா விடை

பேருந்தில் வரும் போது தோன்றும்...


கோடி செலவிட்டு வெற்றி பெறா

அரசியல்வாதி;

கொடி மட்டும் கட்டும் போதே ஜெயிப்பான்...


Ctrl+F போட்டு கிடைக்கா solution யும் ;

F1 போட்டு கண்டறியா Source யும் ;

Keyboard யே தொடாத போது தோன்றும்...


நாள் முழுவதும் சண்டை போட்டு வரா முடிவு

4 நிமிட அமைதியில் கிடைக்கும்...


வாழ்க்கை என்பது எதிர் பார்ப்பது அல்ல

எதிர்ப்பை பார்ப்பது...

இதற்கு பெயர் முரண்பாடு அல்ல

இயற்கையின் வெளிபாடு....


நட்புடன்

விஜய் ஆனந்த் S